Friday, March 20, 2009

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர் - சிதம்பரம்.2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.4.புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.5. கொங்கணர் - திருப்பதி, திருமலை6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்7. வல்லபசித்தர்என்னும் சுந்தரானந்தர் - மதுரை.8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.9.– திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)11. கோரக்கர் – பேரூர்.12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.- கும்பகோணம்.14. உரோமரிசி - திருக்கயிலை15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.23. இராமதேவ சித்தர்- அழகர் மலை24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.26. காசிபர் - ருத்ரகிரி27. வரதர் - தென்மலை28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.34. கமல முனி - ஆரூர்35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.41. வள்ளலார் - வடலூர்.42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்45. ராகவேந்திரர் - மந்திராலயம்.46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.47. குமரகுருபரர் - காசி.48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.54. யுக்தேஸ்வரர் - பூரி.55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.
பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :
ஆதி காலத்திலே தில்லை திருமூலர்அழகுமலை இராமதேவர்அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்கமலமுனி ஆரூர்சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்சுந்தரானந்தர் கூடல்சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்றாள் காசி நந்திதேவர்ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டிபழனி மலை போகநாதர்திருப்பரங்குன்றமதில் மச்சமுனிபதஞ்சலி இராமேசுவரம்சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்கோரக்கர் மாயூரங்குதம்பர்திருவருணையோர் இடைக்காட சமாதியிற்சேர்ந்தனர் எமைக் காக்கவே.
இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்றுமதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.
கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான
பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.


சித்த மருத்துவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல் தேடல்
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஓர் மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்கள் சான்றுள்ளது.சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)
சித்தர்கள்மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பனிரெண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதினாலும் பிணிகள் உற்பத்தி ஆகின்றன.
நம் உடலில் காற்ற, வெப்பம்நீர்இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.
பொருளடக்கம்[மறை]
1 வாத சம்பந்தபிணிகள்
2 பித்த சம்பந்த பிணிகள்
3 சிலேத்தும சம்பந்தபிணிகள்
4 பரிசோதனை
5 சாவாமை
6 மேற்கோள்கள்
7 வெளி இணைப்புகள்

[தொகுவாத சம்பந்த பிணிகள்
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.தொகுபித்த சம்பந்த பிணிகள்
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

[தொகுசிலேத்தும சம்பந்த பிணிகள்
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றிய திருக்குறளைப் பார்ப்போம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.- திருவள்ளுவர்
நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.

[தொகுபரிசோதனை
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.

சாவாமை
"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."[

Tuesday, September 30, 2008